மகா சிவராத்திரி: இரவெல்லாம் விழித்திருக்க முடியாதா? இந்த 1 மணி நேரமாவது தவறவிடாதீர்கள்!
மகா சிவராத்திரியான இன்று இந்த ஒரு மணி நேரத்தை தவறவிடாதீர்கள்.
மகா சிவராத்திரி
சிவபெருமானுக்கு கொண்டாடப்படக் கூடிய முக்கியமான விழாக்களில் ஒன்று மகா சிவராத்திரி. இன்று சிவன் கோயில்களில் 4 கால பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
சிலர் இரவு நேரம் முழுவதும் கண் விழித்திருப்பார்கள். ஆனால் பலரால் இரவு முழுவதும் கண் விழித்திருக்க முடியாத நிலை இருக்கும். எனவே அவ்வாறு கண் விழிக்க முடியாதவர்கள், நள்ளிரவு 12.15 மணி முதல் 12.45 மணி வரையாவது தூங்காமல் இருங்கள். இது முக்கியமான நேரம்.
முக்கியமான நேரம்
பார்வதி தேவி சிவபெருமானை நோக்கி பூஜித்த நேரம் இதுதானாம். இந்த பிரபஞ்சத்தோட மொத்த சக்தி ஆற்றலும் இந்த பூமியை நோக்கி வரும் நேரமும் இதுதானாம்.
நமது முதுகுத்தண்டை நேராக வைத்து நிமிர்ந்து உட்கார்ந்து தியானம் செய்ய வேண்டும். இந்த ஒரு மணி நேரத்தை தவறவிடாமல் மகாசிவராத்திரியில் சிவனை நினைத்து தியானம் செய்யுங்கள் எனக் கூறப்படுகிறது.
இரவு 7.30 மணி முதல் முதல் கால பூஜை தொடங்குகிறது. இந்த நேரமானது கோவிலுக்கு கோவில் மாறுபடும். அடுத்தது இரவு 10.30 மணிக்கு, நள்ளிரவு 12 மணிக்கு, அடுத்த நாள் அதிகாலை 4.30 மணிக்கு என 4 கால பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.