TNPSC குரூப்-4 தேர்வு எழுதியோருக்கு ஓர் முக்கிய அறிவிப்பு..!

Government of Tamil Nadu
By Thahir Mar 22, 2023 01:46 AM GMT
Report

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில், காலிப்பணியிடங்கள் 7,381 ஆக இருந்த நிலையில் தற்போது 10,117 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு 

தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு, கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்டது. இந்த தேர்வை தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான தேர்வர்கள் கலந்து கொண்டு எழுதினர்.

Important Notice for TNPSC Group-4 Exam Writers

முன்னதாக இதற்கான காலிப்பணியிடங்கள் முதலில் 7,381 என டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. தற்போது குரூப்4 காலிப்பணியிடங்கள் மேலும் கிட்டத்தட்ட 3000 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டு 10,117 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணையம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இம்மாத இறுதியில் தேர்வு முடிவுகள் 

தமிழ்நாடு அரசுப்பணிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு தேர்வாணையம் குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளின் மூலம் தகுதியான ஆட்களை நிரப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் குரூப்-4 தேர்வின் மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்கள் பெரும்பாலும் நிரப்பப்படுகின்றன.

மேலும் இதற்கான தேர்வு முடிவு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.