அமர்நாத் யாத்திரை செல்வோர் இனி இந்த 40க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல தடை..!
அமர்நாத் யாத்திரை செல்வோர் பிரைடு ரைஸ், பூரி, பீட்சா உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல ஸ்ரீ அமர்நாத் கோயில் வாரியம் தடை விதித்துள்ளது.
ஜுலை 1 ஆம் தேதி தொடங்கும் அமர்நாத் யாத்திரை
இந்து தெய்வங்களிலும், சிவபெருமான் இந்தியர்களால் மட்டுமல்ல, பிற நாடுகளிலும் வணங்கப்படுகிறார். ஒவ்வொரு ஆண்டும் கோடை மாதங்களில் தெற்கு காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் தனித்துவமான வடிவத்தில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் நடந்து வருகின்றனர்.

இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜுலை 1 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 62 நாட்கள் நடைபெற உள்ளது.
அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சுகாதாரங்களுக்கான ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.
40க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களுக்கு தடை
இதில் 40-க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களுக்கு ஸ்ரீ அமர்நாத் கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இது குறித்து ஸ்ரீ அமர்நாத் கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உடல் ஆரோக்கியத்திறக்காக தெற்கு காஷ்மீரில் அமைந்துள்ள இமயமலை புனித ஸ்தலத்திற்கு யாத்திரை வரும் பக்தர்கள், தினமும் காலை மற்றும் மாலை என குறைந்தது 4 முதல் 5 கிமீ வரை நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
யோகா மற்றும் மூச்சுப் பயிற்சிகள், குறிப்பாக ஆக்ஸிஜனை மேம்படுத்துவதற்கான பிராணாயமம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
அமர்நாத் யாத்திரைக்கு வரும் பக்தர்கள் 14 கிலோமீட்டர் நடைபயணத்தை தொடங்குவதற்கு முன், அனுமதிக்கப்பட்ட பொருட்களை மட்டும் எடுத்து வர வேண்டும்.
புலாவ், பிரைடு ரைஸ், பூரி, பீட்சா, பர்கர், பரோட்டா, தோசை, மற்றும் வறுத்த ரொட்டி, வெண்ணெய், கிரீம் சார்ந்த உணவுகள், ஊறுகாய், சட்னி, வறுத்த பப்பாளி, வறுத்த மற்றும் துரித உணவுப் பொருட்கள், பானங்கள் என தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு. சில அரிசி உணவுகளுடன் தானியங்கள், பருப்பு வகைகள், பச்சை காய்கறிகள் மற்றும் சாலட் போன்ற ஆரோக்கியமான உணவுகளை எடுத்துச் செல்ல பரிந்துரைத்துள்ளது.
தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களை எடுத்துச் சென்றால் அபராதங்கள் விதிக்கப்படும் என ஸ்ரீ அமர்நாத் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.