2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

important nirmala sitharaman budget session 2022 -2023
By Swetha Subash Feb 01, 2022 08:41 AM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பாராளுமன்ற மக்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

அப்போது அவர் பேசிய முக்கிய அம்சங்கள் வருமாறு,

“இந்த பட்ஜெட் அடுத்த 25 ஆண்டுகளுக்கான அம்ரித் கல் பொருளாதாரத்தின் அடித்தளத்தை அமைக்க முயற்சிக்கிறது.

ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் முழுமையாக தனியாருக்கு பரிமாற்றம் செய்யப் பட்டுள்ளது.

மேக் இன் இந்தியா' மூலம் 6 மில்லியன் புதிய வேலைகளை உருவாக்க முடியும்.

2021-22 பட்ஜெட்டில் பொது முதலீடு மற்றும் மூலதனச் செலவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

2022-23ல் தேசிய நெடுஞ்சாலைகள் 25,000 கி.மீ. தூரம் அமைக்கப்படும்.

மலைப் பகுதிகளில் போக்குவரத்து மற்றும் தொடர்பு வசதியை மேம்படுத்த தனியார் பங்களிப்புடன் திட்டம்.

வேளாண் ஏற்றுமதிக்கு ரயில்வே துறையை திறம்பட செயல்படுத்த நடவடிக்கை.

400 புதிய வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.

சிறுகுறு தொழில்களுக்கான அவசர கடன் உறுதி திட்டம் மார்ச் 2023-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் ரசாயனமற்ற இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும்.

நாடு முழுவதும் 100 சரக்கு முனையங்கள் அமைக்கப்படும்.

‘ஒன் ஸ்டேசன், ஒன் பிராடக்ட்’ திட்டம் உள்ளூர் வணிகத்திற்கு உதவியாக இருக்கும், பொருட்கள் விநியோக பாதையை மேம்படுத்தும்.

மத்திய பட்ஜெட்டில் சில பொருட்களுக்கு வரிச்சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. வைர நகைகளுக்கான சுங்கவரி குறைக்கப்படுகிறது.

வைரங்கள், ஆபரண கற்களுக்கான இறக்குமதி வரி 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

மொபைல் சார்ஜர், கேமரா லென்சுகள் உள்ளிட்ட உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

குடைகளுக்கான இறக்குமதி வரி 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.” என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.