”இனிதான் நமக்கு முக்கியத் தேர்தல் பணி உள்ளது” - மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று முடிந்தது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் மொத்தமாக 72.8 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப்பதிவான ஈ.வி.எம் இயந்திரங்கள் வாக்கு எண்ணப்படும் மையங்களில் பாதுகாப்பாக வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது.
பெரிய அளவில் சட்ட ஒழுங்கு பிரச்சனை இல்லாமல் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் நேற்று இரவு வேளச்சேரியில் ஈ.வி.எம் இயந்திரத்தை தனியார் வாகனங்களில் அதிமுகவினர் எடுத்துச் செல்கின்றனர் என சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக விசாரிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 75 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்த மையங்களுக்கு ஆயுதம்ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ‘இனிதான் நமக்கு முக்கியத் தேர்தல் பணி உள்ளது’ என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இனிதான் நமக்கு முக்கியத் தேர்தல் பணி!
— M.K.Stalin (@mkstalin) April 7, 2021
EVM மையங்களில்
பாதுகாப்பு ஏற்பாடுகள், CCTV, வெளியாட்களின் நடமாட்டங்கள் குறித்து தொடர்ச்சியாகக் கண்காணித்திட “டேர்ன் டூட்டி” அடிப்படையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிட வேண்டும்.
விதிமுறை மீறல்கள் நடந்தால் கட்சித் தலைமைக்கு தெரிவிக்கவும். pic.twitter.com/hSb1r1zJqK
அதில், “இனிதான் நமக்கு முக்கியத் தேர்தல் பணி! EVM மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள், CCTV, வெளியாட்களின் நடமாட்டங்கள் குறித்து தொடர்ச்சியாகக் கண்காணித்திட “டேர்ன் டூட்டி” அடிப்படையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிட வேண்டும். விதிமுறை மீறல்கள் நடந்தால் கட்சித் தலைமைக்கு தெரிவிக்கவும்.
” என்றுள்ளார்.
மேலும், “கொகரோனா அச்சுறுத்தலுக்கு இடையில் நடைபெற்ற ஜனநாயகத் தேர்தல் திருவிழாவில் பேரார்வத்துடன் பங்கேற்று வாக்களித்த வாக்காளர்களுக்கும் - இப்பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவலர்கள், மக்கள் நல்வாழ்வுத் துறையினர் உள்ளிட்ட தேர்தல் பணியாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியையும் - பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்