கோவிலை விட பள்ளிக்கூடம் தான் முக்கியம்; ராமர் என்ன கொடுத்தாரு..? வைரலாகும் சிறுவனின் Video!

Viral Video India Ayodhya Ram Mandir
By Jiyath Jan 24, 2024 08:00 AM GMT
Report

கல்வியின் முக்கியத்துவம் குறித்து 13 வயது சிறுவன் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைரல் சிறுவன் 

உத்திர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு அரசியல் கட்சியினர், திரை பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள், பக்தர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கோவிலை விட பள்ளிக்கூடம் தான் முக்கியம்; ராமர் என்ன கொடுத்தாரு..? வைரலாகும் சிறுவனின் Video! | Importance Of Schools Over Temples Up Boy Speech

பால ராமர் பிரதிஷ்டையை தொடர்ந்து பிரதமர் மோடி தீபாராதனை காட்டி வழிபாடு நடத்தினார். தற்போது பொதுமக்கள் அயோத்தி ராமர் கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர். ராமர் கோவில் கும்பாபிஷேக விழா அன்று, 13 வயது சிறுவன் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.

அவர் பேசியதாவது "எங்களுக்கு கோயிலை விட பள்ளியே முக்கியம். எங்களுக்கு கடவுள் வேண்டாம். நாங்கள் எங்கள் ஆசிரியர்கள், பெற்றோர்களை நாங்கள் வணங்குகிறோம்.

ராமர் என்ன கொடுத்தார்?

எங்களுக்கு கடவுளின் ஆசீர்வாதம் தேவையில்லை. நான் ஐ.ஏ.எஸ் படிக்க விரும்புகிறேன். அதனால் கோயிலுக்கு செல்வதை விட பள்ளிக்கு செல்வதை விரும்புகிறேன்.

கோவிலை விட பள்ளிக்கூடம் தான் முக்கியம்; ராமர் என்ன கொடுத்தாரு..? வைரலாகும் சிறுவனின் Video! | Importance Of Schools Over Temples Up Boy Speech

நான் பள்ளிக்கு செல்வதால்தான் இவ்வாறு தைரியமாக புத்திசாலித்தனமாக பேசுகிறேன். நான் கோயிலுக்கு சென்றால், ரூ.2, ரூ.4-ற்காக பிச்சை எடுத்திருப்பேன். கோயிலுக்கு சென்று நேரத்தை வீணடிப்பதை விட, பள்ளிக்கு சென்று எதையாவது புதிதாக கற்றுக்கொள்வேன். அம்பேத்கர் அரசியலைப்பு சட்டம், இட ஒதுக்கீடு, உரிமைகள் என எல்லாவற்றையும் கொடுத்துள்ளார்.

ஆனால் ராமர் என்ன கொடுத்தார்?. நாங்களும் இஸ்லாமியர்களும் சகோதரர்களாகவே இருக்கிறோம். அவர்கள் ஒன்றும் மற்றவர்கள் கூறுவது போல் பயங்கரவாதிகள் அல்ல. நான் ஐ.ஏ.எஸ் ஆனதும் சமூக சேவை செய்ய விரும்புகிறேன். உத்திர பிரதேசத்தை சேர்ந்த இந்த சிறுவனின் பேச்சு தற்போது தமிழ்நாடு வரை பேசுபொருளாகியுள்ளது.