ஓராண்டில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
ஓராண்டில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாக தேனி மாவட்டத்தில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.
தேனி மாவட்டத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார்.
முன்னதாக 11 ஆயிரம் பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பின் பேசி அவர், திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமைத்த பிறகு தமிழ்நாடு முழுவதும் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
10 ஆண்டில் செய்ய வேண்டிய சாதனைகளை ஒரே ஆண்டில் செய்துள்ளது தி.மு.க. அரசு. ‘மக்களை தேடி மருத்துவம்’ என்ற சிறப்பு வாய்ந்த திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது.
இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் பட்டம் பெற வேண்டும் என்பதே அரசின் எண்ணம்.
பெண் கல்விக்கு எதிரான அத்தனை தடைகளையும் தகர்த்தெறிவோம். கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றுவோம்.
பெரிய குளம், உத்தமபாளையம் மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும். மக்களுக்கு சேவை செய்வதற்கே நேரம் போதுமானதாக இல்லை; விமர்சனத்திற்கு பதில் தர விரும்பவில்லை.
எம்.ஜி.ஆரிடம் இருந்த அரசியல் நாகரீகம் தற்போது உள்ளவர்களிடம் இல்லை. 133 புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் ரூ.64 ஆயிரம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார்.