சென்னையில் மீண்டும் கனமழை : இந்த 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

chennai heavyrainfall
By Irumporai Nov 22, 2021 05:04 AM GMT
Report

வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த இரு வாரமாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது.

இந்த நிலையில் தற்போது சில நாட்களாக மழை ஓய்ந்துள்ளது. இருப்பினும் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. இச்சூழலில் தெற்கு அந்தமான் கடற்பகுதியில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவி வருகிறது.

சென்னையில் மீண்டும் கனமழை :  இந்த 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு | Impact Of Flood Water On Most Parts Of Tamil Nadu

தற்போது தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி. தமிழக கடலோர பகுதி வரை நீடிக்கிறது. இதன் காரணமாக இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று, கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.