இதுவரை இல்லாத அளவில் இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்த கொரோனா பாதிப்பு

covid india impact unprecedented
By Jon Apr 09, 2021 10:29 AM GMT
Report

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில், 1 லட்சத்து 31 ஆயிரத்து 968 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

அந்த வகையில் தற்போது 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில், இந்தியாவில், 1 லட்சத்து 31 ஆயிரத்து 968 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்தியா முழுவதும் நேற்று மட்டும் 780 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 61,899 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.