நாயோடு ஒப்பிட்டு இமானை விமர்சனம் செய்த முன்னாள் மனைவி - வைரலாகும் ட்விட்டர் பதிவு

2 மாதங்கள் முன்

இசையமைப்பாளர் டி இமானை விமர்சனம் அவரது முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவர் டி இமான் , இவர் கடந்த டிசம்பர் மாதம் தனது மனைவி மோனிகா ரிச்சர்டை விவாகரத்து செய்தார்.

இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழ்ந்தைகள் உள்ள நிலையில் தனது மனைவியினை பிரிந்தார் டி இமான் அதே சமயம் ,அடுத்த 4 மாதங்களிலேயே இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் இமான்.

மறைந்த பிரபல ஓவியரும் டிசைனருமான உபால்டின் மகள் எமலி உபால்டை கடந்த ஞாயிற்றுக் கிழமை இரண்டாவது திருமணம் செய்தார் டி இமான். இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்திருந்தார், டி இமான்.

இமானின் இரண்டாவது திருமணம் குறித்து கருத்து தெரிவித்த அவரது முன்னாள் மனைவி மோனிகா, 12 வருடங்களாக உன்னையே நினைத்து உங்களுக்காகவே வாழ்ந்த ஒருவரின் இடத்தை எளிதாக ரீப்ளேஸ் செய்துவிட்டீர்கள்.

உங்களுக்காக வாழ்ந்த நான் ஒரு முட்டாள் என்றும் குழந்தைகளுக்கும் ரீப்ளேஸ்மெண்ட் செய்துவிட்டீர்கள் என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது மோனிகா தனது ட்விட்டர் பக்கத்தில் இமான் திருமண அறிவிப்பை போன்றே ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் எனது புதிய குடும்ப உறுப்பினர்கள் குறித்த தகவலை ஷேர செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மே 20 ஆம் தேதியான இன்று இரண்டு Dalmatians நாய்களை வீட்டிற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த செல்ல பிராணிகளான லியா மற்றும் மியா எனக்கு கிடைக்க துணையாக இருந்த என் குடும்பத்தினருக்கும் என் நலம் விருப்பிகளுக்கும் நன்றி.

நாயோடு ஒப்பிட்டு  இமானை விமர்சனம்  செய்த  முன்னாள் மனைவி - வைரலாகும் ட்விட்டர் பதிவு | Imman Ex Wife Monicka Richard Tweet Goes Viral

இந்த நாய்கள் இனி மேல் என் 3வது மற்றும் 4வது மகள்களாக இருப்பார்கள்,என இமானின் அறிக்கையை போனறே வெளியிட்டுள்ளார் மோனிகா.    

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.