‘’அண்ணாச்சியை, சேட்ஜியா மாத்துற முயற்சி நடக்குது” : சைக்கிள் கேப்பில் கிடா வெட்டிய கமல்!
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இமான் அண்ணாச்சி 12 ஆவது போட்டியாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில் இசை வாணி, ராஜு, மதுமிதா, அபிஷேக், நமீதா, பிரியங்கா, அபினை, பவானி, சின்ன பொண்ணு, நதியா சாங், வருண் ஆகியோர் களத்தில் உள்ளனர்
இந்த. நிலையில், 12 ஆவது போட்டியாளராக தமிழ் நகைச்சுவை நடிகரும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருமாகிய இமான் அண்ணாச்சி களமிறக்கப்பட்டுள்ளார் து தொலைக்காட்சி பிரபலம் இமான் அண்ணாச்சி, போட்டியாளராக அறிமுகப்படுத்தப்பட்டார்.
நிகழ்ச்சியில் குட்டீஸ்களை கையாள்வதைப் போல, பிக் பாஸ் வீட்டிலுள்ள குட்டீஸ்களையும் கையாளுவேன் என மேடையில் குறிப்பிட்டார் அண்ணாச்சி.
பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கமல் ஹாசனை வரவேற்று அழகாக ஆங்கரிங் செய்து அசத்தினார். பின்னர் தன்னை அறிமுகபடுத்திய கமல்ஹாசனிடம் இமான் அண்ணாச்சி பேசும் போது :
இந்த குர்தாவைக் கொடுத்து என்னை சேட் ஜியா மாத்திட்டாங்க சார் என்றார் . ‘’அண்ணாச்சியை சேட்ஜியாக மாற்றும் முயற்சி நாடுமுழுக்க நடக்கிறது. ஆனால் அண்ணாச்சி, அண்ணாச்சியாகவேதான்’’ என சைக்கிள் கேப்பில் அரசியல் கிடாவை கமல் வெட்ட .
ஆடியன்ஸ் மத்தியில் கைத்தட்டல் அள்ளியது.
ஆக இந்த முறையும் கம்லஹாசனின் {மறைமுக}அரசியல் பேச்சுக்கு பஞ்சமிருக்காது என கமல் ரசிகர்கள் இணையத்தில் கூறி வருகின்றனர்.