உலகின் பணக்கார நாடுகள் பட்டியல்; முதலிடத்தில் அமெரிக்கா - அப்போ இந்தியாவின் நிலை?

World
By Jiyath Oct 28, 2023 05:58 AM GMT
Report

சர்வதேச நாணய நிதியம் (IMF) உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

பணக்கார நாடுகளின் பட்டியல்

ஒரு நாட்டின் செல்வநிலையை கண்டறிய பிரதானமானது ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கீடு. மொத்த உள்நாட்டு உற்பத்தி என்றால் ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியுள்,

உலகின் பணக்கார நாடுகள் பட்டியல்; முதலிடத்தில் அமெரிக்கா - அப்போ இந்தியாவின் நிலை? | Imf Released List Of Richest Countries In World

ஒரு நிலப்பகுதியின் எல்லைக்குள் உற்பத்தி செய்யப்படுகின்ற மொத்தப் பொருட்கள் மற்றும், சேவைகளின் சந்தை மதிப்பே மொத்த உள்நாட்டு உற்பத்தி என்று கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் சர்வதேச நாணய நிதியம் (IMF) உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் முதல் இடத்தில் இருப்பது அமெரிக்கா. அந்நாடு அதிக மொத்த உள்நாட்டு உற்பத்தியாக 135.61 ஆயிரம் அமெரிக்க டாலர்களுடன் இருக்கிறது.

5வது இடத்தில் இந்தியா

அடுத்தடுத்த இடங்களில், சீனா 17.7 ஆயிரம் பில்லியன், ஜெர்மனி 4.43 ஆயிரம் கோடி, ஜப்பான் 4.23 ஆயிரம் கோடி, இந்தியா 3.73 ஆயிரம் கோடி, ஐக்கிய இராச்சியம் 3.33 ஆயிரம் கோடி, பிரான்ஸ் 3.05 ஆயிரம் கோடி, இத்தாலி 2.19 ஆயிரம் கோடி, பிரேசில் 2.13 ஆயிரம் கோடி, கனடா 2.12 ஆயிரம் கோடி என்ற இடங்களில் உள்ளன.

உலகின் பணக்கார நாடுகள் பட்டியல்; முதலிடத்தில் அமெரிக்கா - அப்போ இந்தியாவின் நிலை? | Imf Released List Of Richest Countries In World

இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ள இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ஒரு ஆண்டில் 3.73 ஆயிரம் கோடியாக உள்ளது. மேலும் நாட்டு மக்களின் செல்வ நிலைமையைக் கணக்கிட ஜிடிபி பெர் கேப்பிடா எனப்படும் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்னும் கணக்கீடு செய்யப்படுகிறது. அந்த வரிசையில் பார்த்தால், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.61 ஆயிரம் அமெரிக்க டாலர் என்ற அளவில் மிகவும் பின்தங்கி 140வது இடத்தில் உள்ளது இந்தியா.