உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகத்தில் அதி கனமழைக்கு வாய்ப்பு

tamilnadu heavyrainfall
By Petchi Avudaiappan Nov 22, 2021 09:34 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

    வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அதீத மழைக்கு வாய்ப்பிருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 25 நாட்களில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல மழை பொழிவை கொடுத்துள்ளது. கடந்த 5 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பலத்த மழை கொட்டியது.

இதனால் ஏரி, குளங்கள் அனைத்தும் நிரம்பின. கடந்த 10 நாட்களாக பெய்த கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் தென் தமிழகத்தை நோக்கி நகரக்கூடும் என்றும், இதன் காரணமாக நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதனால் அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.