இனி கவலையில்லை.. போலி செய்திகளை எளிதாக கண்டுபிடிக்க - வாட்ஸ்அப்பில் சூப்பர் வசதி!
வாட்ஸ்அப்பில் போலி செய்தி அல்லது புகைப்படங்கள் பகிரப்படுவதை தவிர்க்க புதிய அம்சம் அறிமுகமாகியுள்ளது.
போலி செய்தி
வாட்ஸ்அப் செயலி உலகம் முழுவதும் 2 பில்லியனுக்கு அதிகமான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இணையம் மூலம் இலவசமாக குறுஞ்செய்தி அனுப்புவது, கால் பேசுவது முதல் பணப்பரிமாற்றம் செய்வது வரை பயனர்களை கவர புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்கும் நோக்கத்தில் புதிய இமேஜ் சர்ச் அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது. அதன்மூலம் வாட்ஸ்அப்பை விட்டு வெளியேறாமல் போட்டோக்களை சரிபார்க்கும் வழிமுறையை வழங்குகிறது.
அதவது பகிரப்பட்ட படத்தை பார்க்கும்போது திரையில் தெரியும் மூன்று புள்ளியை கிளிக் செய்தால், "Search on Web" என்ற ஆப்ஷன் இருக்கும். இது பயனர்கள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்யும் வசதியைக் கொடுக்கிறது. இந்த ரிவர்ஸ் இமேஜ் சர்ச் படத்தைப் பற்றி கூடுதலான தகவல்களை அறிந்துகொள்ளவும் உதவுகிறது.
சூப்பர் வசதி
இந்த வசதியைக் கொண்டு பகிரப்பட்ட படம் எடிட் செய்யப்பட்டதா? மாற்றப்பட்டதா அல்லது தவறாக சித்தரிக்கப்பட்டதா என்பதை சரியாக தெரிந்துக்கொள்ளவும் முடியும். மார்ஃபிங் செய்யப்பட்ட படங்கள் மூலம் போலி தகவல்கள் மிக வேகமாக மக்கள் மத்தில் பரவுகிறது.
ஒரு படத்தின் நம்பகத்தன்மையை எளிமையாக உறுதிப்படுத்தவும் முடிவதால் பயனர்களுக்கு உண்மையைச் சரிபார்க்கும் திறனை வழங்கி, தவறான தகவல் பரவுவதைத் தடுக்கவும் இது வழிவகுக்கிறது. கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் அம்சத்தின் மூலம் இது செயல்படுகிறது.
அதன்படி, குறிப்பிட்ட படம் ஆன்லைனில் முதலில் பகிரப்பட்டது எப்போது, எந்தத் தளத்தில் முதலில் வெளியானது, ஆன்லைனில் வேறு எந்தெந்த தளங்களில் இதே படம் இருக்கிறது என்ற தகவல்களை தெரிவிக்கும். தற்போது இந்த அம்சம் பீட்டா பயனர்கள் மட்டுமெ கிடைக்கிறது. விரைவில் அனைவருக்கும் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.