தமிழர் என்பதால் அங்கீகாரம் மறுப்பு - கர்நாடகாவில் பிரபல இயக்குநருக்கு நேர்ந்த கொடுமை

sandalwood directorkganesan
By Petchi Avudaiappan Oct 21, 2021 08:58 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

கர்நாடக திரையுலகில் தான் புறக்கணிக்கப்படுவதாக இயக்குனர் கு.கணேசன் வேதனை தெரிவித்துள்ளார்.

இன்வெஸ்கோ மற்றும் அமெரிக்க திரைப்பட மையம் சார்பில் நடத்தப்பட்ட சர்வதேச திரைப்பட விழாவில் பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரம் திரைப்படங்கள் திரையிட பட்டது. இதில் குழந்தைகள் எவ்வாறு கடத்த படுகின்றனர்? அவர்கள் படும் துயரங்களையும் உண்மை சம்பவங்களுடன் தத்ரூபமாக காட்சி படுத்தப்பட்ட 'நம்ம மகு' என்ற திரைப்படம் முதலிடத்தை பெற்றது.

கர்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூருவை சேர்ந்த கு.கணேசன். என்பவர் இயக்கிய இந்த திரைப்படம் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற திரைப்பட விழாவில் 23 சர்வதேச விருதுகளையும் பெற்றது. இந்த விருதினை பெற்ற குழுவினருக்கு அமெரிக்கா திரைப்பட ஜாம்பவான்கள் உயரிய மரியாதையினை வழங்கினர். நேக்ய்ன்  இது தமிழர்களுக்கு கிடைத்த அங்கீகாரம் என்று மகிழ்ச்சியுடன் கு.கணேசன் தெரிவித்தார்.

ஆனால்  என் தந்தையின் பூர்வீகம் திருவண்ணாமலை என்ற பேதிலும் கர்நாடகத் தமிழரான நான் பிறந்து வளர்ந்தது முழுவதுமே தலைநகரான பெங்களூரில் தான். சினிமா மற்றும் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட காரணமாக, சமூக அக்கறையை வெளிப்படுத்தும் 16 திரைப்படங்களை தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் இயக்கினேன். சமீபத்தில் நான் இயக்கிய "நம்ம மகு" என்ற குழந்தைகள் நலன் குறித்த திரைப்படம் 23 சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

இந்தத் திரைப்படத்தை கர்நாடக திரைத்துறையைச் கர்நாடக அரசு அங்கீகரிக்க வில்லை என்பது தமிழர் என்ற ஒரு காரணமாக கூட இருக்கலாம். கர்நாடகாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் இத்திரைப்படத்தை திரையிட கூட அனுமதிக்கப்படவில்லை. இது எனக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை தந்தது. இதற்கு காரணம் பிறப்பால் தமிழர் என்பதால் கர்நாடகாவில் தனக்கான முக்கியத்துவம் மறுக்கப் படுகிறது. இதுபோன்று எவ்வளவு பிரச்சினைகள் சவால்கள் வந்தாலும் சமூக நலனுக்காக தொடர்ந்து இதுபோன்ற திரைப்படங்களை எடுத்துக் கொண்டு இருப்பேன் என கு.கணேசன் தெரிவித்துள்ளார்.