புதிய அரங்கில் பாடல் ஒலிப்பதிவு செய்யும் இளையராஜா

vjs vetrimaaran soori
By Jon Feb 03, 2021 04:47 PM GMT
Report

 பிரசாத் ஸ்டூடியோ விவகாரத்திற்கு பிறகு இசையமைப்பு பணிக்காக இளையராஜாவின் புதிய ஸ்டுடியோ இன்று முதல் அதிகாரபூர்வமாக தொடங்கியது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தினர் இளையராஜாவை காலி செய்ய கூறினர். இதனால், இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தன்னை வெளியேற்றியதற்காக 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி இசையமைப்பாளர் இளையராஜா தனது மனுவில் கூறினார். அத்துடன் ஸ்டூடியோவில் உள்ள பொருட்களை எடுக்கவும் அனுமதி அளிக்க அறிவுறுத்துமாறும் கூறினார்.

புதிய அரங்கில் பாடல் ஒலிப்பதிவு செய்யும் இளையராஜா | Ilyaraja Music Composing Song

இதனிடையே இளையராஜா வழக்குகளை திரும்ப பெற்றால் அவர் பொருட்களை எடுக்க அனுமதி அளிக்கப்பதாக பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர்கள் தெரிவித்தனர். அதற்கு இளையராஜா ஒப்புக் கொண்ட நிலையில்,பிரசாத் ஸ்டூடியோவில் அவர் பயன்படுத்திய பொருட்கள் குப்பை போல் போடப்பட்டதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில் இளையராஜா சென்னையில் புதிய ஸ்டுடியோவில் தனது முதல் பாடலை ஒளிப்பதிவு செய்கிறார் . இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கான பாடலை இளையராஜா ஒளிப்பதிவு செய்கிறார்.

கோடம்பாக்கத்தில் உள்ள பழைய எம்.எம். தியேட்டரில் இளையராஜாவின் புதிய ஸ்டுடியோ இன்று திறக்கப்படுகிறது.

வடபழனி பிரசாத் இளையராஜா, பிரசாத் ஸ்டூடியோவில் தான் பல ஆண்டுகளாக தனது படத்திற்கான இசையமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.