திருமணத்துக்கு வற்புறுத்தியக் காதலி..காட்க்குள் வைத்து கழுத்தை நெரித்துக் கொன்ற கள்ளக்காதலன்
விருதுநகர் மாவட்டத்தில் கல்யாணத்துக்கு கட்டாயப்படுத்திய கள்ளகாதலியைக் கட்டுக்குள் வைத்து கள்ளக்காதலன் கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை கூத்திப்பாறை பகுதியை சார்ந்தவர் லிங்கம். இவரது மகள் சத்ய பிரியா (வயது 21). மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி பகுதியை சார்ந்தவர் வசந்தபாண்டி (வயது 26). இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த 2 வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
திருமணம் முடிந்த 7 மாதத்திற்கு பின்னர் பேறுகாலத்திற்கு அருப்புக்கோட்டை வந்த சத்யபிரியா, குழந்தையை பெற்றெடுத்த பின்னரும் கணவரின் வீட்டிற்கு செல்லாமல் தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சத்யபிரியாவிற்கும் - சாத்தூர் பகுதியை சார்ந்த குருசாமி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கமானது இவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறவே, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், சத்யபிரியா குருசாமியிடம் தன்னை திருமணம் செய்துகொள்ள கூறி வற்புறுத்திய நிலையில், இதற்கு குருசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். ஒரு சமயத்திற்கு மேல் ஆத்திரமடைந்த சத்யபியா தன்னை திருமணம் செய்துகொள்ளாத பட்சத்தில், உனது பெயரை எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டியுள்ளார்.
இந்நிலையில், கடந்த வருடம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி பணிக்கு சென்ற சத்யபிரியா வீட்டிற்கு வரவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் காணாத நிலையில், அவரது தந்தை கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணையில் முன்னேற்றம் இல்லாமல் தவித்த நிலையில், அவரது அலைபேசியை வைத்து ஆய்வு செய்ததில் குருசாமியிடம் அடிக்கடி பேசி வந்ததை கண்டறிந்துள்ளனர்.
குருசாமியை பிடித்து விசாரணை செய்கையில், திருமணத்திற்கு வற்புறுத்திய சத்யபிரியாவை கடந்த வருடம் ஆகஸ்ட் 13 ஆம் தேதி சாத்தூர் காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று பார்க்கையில் பெண்மணி எலும்பு கூடாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், குருசாமியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.