சட்டவிரோத கடன் செயலிகளை ஒடுக்க நடவடிக்கை - மத்திய அரசு முடிவு
சட்டவிரோத கடன் வழங்கும் செயலிகளை ஒடுக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆன்லைன் கடன் செயலிகளுக்கு ஆப்பு வைக்கும் அரசு
அண்மைகாலமாக ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் பணம் பெறும் பயனார்கள் பலர் மன உளைச்சலுக்கு உள்ளவதாக புகார் எழுந்தது.

ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் பணம் பெற்று திரும்பி செலுத்தும் தொகை மாறி போனால் செயலி நிறுவனத்தின் ஊழியர்கள் பயனாளர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாக தொடர் புகார்கள் எழுந்து வருகின்றனர்.
இந்த நிலையில் சட்டவிரோதமாக கடன் செயலிகளால் பல தற்கொலை சம்பவங்கள் துாண்டப்பட்டு இருப்பதை தொடர்ந்து நிதியமைச்சர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் சட்டவிரோதமாக கடன் வழங்கும் செயலிகளை ஒடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.