கிளவுஸில் ஒட்டப்பட்ட டேப் - சர்ச்சையில் சிக்கிய இந்திய அணி வீரர்

rishabh pant INDvsENG Pant gloves
By Petchi Avudaiappan Aug 27, 2021 04:01 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

 இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டின் கீப்பிங் கிளவுஸில் ஒட்டப்பட்டிருந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 78 ரன்களும், இங்கிலாந்து 432 ரன்களும் எடுத்தன.

354 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கியுள்ள இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வரும் நிலையில் இங்கிலாந்து அணி பேட்டிங்கின் போது சர்ச்சைக்குரிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

அந்த அணி வீரர் டேவிட் மலான் 70 ரன்கள் எடுத்து சிராஜ் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதில் வழக்கத்திற்கு மாறாக பண்ட் தனது கீப்பிங் கிளவுஸில் நடுவிரல் மற்றும் ஆட்காட்டி விரலை சேர்த்து டேப் அடித்திருந்தார்.

அதை கவனித்த கள நடுவர்கள் அதனை அகற்றுமாறு எச்சரிக்கையுடன் தெரிவித்தனர். இதனையடுத்து டேப்பை இந்திய அணி கேப்டன் கோலி அகற்றினார். இதனால் சிறிது நேரம் களத்தில் பரபரப்பு நிலவியது.