“நலமாக வரவேண்டும் சகோதரரே ” - கமல் நலம் பெற இளையராஜா வாழ்த்து

covid19 ilayaraja kamalhassan
By Petchi Avudaiappan Nov 24, 2021 11:54 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கமல்ஹாசன் நலம் பெற வாழ்த்தி இசையமைப்பாளர் இளையராஜா ட்வீட் செய்துள்ளார்.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதியானது. நிகழ்ச்சி ஒன்றிற்காக அமெரிக்கா சென்று வந்த அவர் தனக்குத் தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே கமல்ஹாசனின் உடல்நிலை சீராக உள்ளதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த், சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்கள் பலரும் கமல்ஹாசன் விரைந்து குணமடைய வேண்டி வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் கமல்ஹாசன் பூரண நலம் பெற வாழ்த்தி இசையமைப்பாளர் இளையராஜா ட்வீட் செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நலமாக வரவேண்டும் சகோதரரே கலை உலகை ஆ……….ஹா…………என ஆச்சரியப்பட வைக்க வேண்டும் வாருங்கள் சீக்கிரம். @ikamalhaasan” என பதிவிட்டுள்ளார்.