இலியானா மருத்துவமனையில் அனுமதி... - வெளியான புகைப்படம் - ஷாக்கான ரசிகர்கள்

Viral Photos Ileana D'Cruz
By Nandhini Jan 31, 2023 09:37 AM GMT
Report

நடிகை இலியானா

நடிகை இலியானா தெலுங்கு திரையுலகத்தில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தமிழ் சினிமாவில் ‘கேடி’ படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதனையடுத்து, விஜய் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'நண்பன்' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தார்.

தெலுங்கு, தமிழ் தவிர இந்தி மொழி படங்களிலும் அவர் நடித்து வருகிறார். சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கம் நடிகை இலியானா அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துக் கொண்டு வருகிறார்.

ileana-d-cruz-hospital-admit-viral-photo

மருத்துவமனையில் அனுமதி

இந்நிலையில், நடிகை இலியானாயின் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவர் மருத்துவமனையில் படுத்திருப்பது போல உள்ளது.

திடீர் என ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இலியானாவின் புகைப்படத்தை பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இலியானா தன் நோய்க்கான காரணங்கள் ஏதும் இதுவரை வெளியிடவில்லை. அந்த புகைப்படத்தில் கையில் ஊசி மூலம் குளூக்கோஸ் ஏறுகிறது.

மேலும் சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்ததால் தற்போது எந்த பிரச்னையும் இல்லை என்றும், இலியானா தன் உடல்நிலை குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.