இளையராஜா அப்படி பட்டவரா...! பிரபல இயக்குநரை புறம் தள்ளினாரா?
தமிழ் சினிமாவின் 1980 ஆரம்ப கட்டத்தில் பிரபல இயக்குநர்களின் அனைத்து படங்களும் இசைஞானி இளையராஜாதான் இசை அமைத்து கொடுத்தார்.
எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைந்த கே.பாலசந்தர்
பிரபல இயக்குநர்களான பாரதிராஜா, பாலசந்தர், பாக்யராஜ், மணிரத்னம் போன்றவர்களுக்கு இளையராஜா தான் இசையமைத்து கொடுத்தார்.
ஒரு கட்டத்திற்கு மேல் இளையராஜாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வெவ்வேறு இசை அமைப்பாளர்களை தேடி சென்றனர்.
இந்த நிலையில் எம்.எஸ்.விஸ்வநாதன் தான் இயக்குநர் கே.பாலசந்தர் படங்களில் தொடர்ச்சியாக பல படங்களில் இசையமைத்து கொடுத்தார்.
இருவரும் இணைந்து பணிபுரிந்த அனைத்து பாடத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. நினைத்தாலே இனிக்கும் படத்தில் 14 பாடல்களை எம்.எஸ்.விஸ்வநாதன் கம்போஸ் செய்திருந்தார்.அந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது.
சிந்து பைரவி மூலம் இணைந்த இளையராஜா
முதன் முதலாக கே.பாலசந்தருடன் இசைஞானி இளையராஜா சிந்து பைரவி என்ற திரைப்படத்தில் முதன் முதலாக இணைந்து செயல்பட்டனர்.
இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் ஆனது. ‘பாடறியேன் படிப்பறிவேன்’, ‘நானொரு சிந்து’, ‘மனதில் உறுதி வேண்டும்’, ‘பூ மாலை வாங்கி வந்தேன்’ உட்பட ஒன்பது பாடல்களும் ஜேசுதாஸ் மற்றும் சித்ரா ஆகிய இருவர் மட்டுமே பாடினர்.
இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு சிறந்த பாடகிக்கான தேசிய விருது சித்ராவுக்கு கிடைத்தது. இதை தொடர்ந்து இருவரும் ‘புன்னகை மன்னன்’, ‘மனதில் உறுதி வேண்டும்’, ‘உன்னால் முடியும் தம்பி’ மற்றும் ‘புதுப்புது அர்த்தங்கள்’ ஆகிய படங்களில் பணிபுரிந்தனர்.
புன்னகை மன்னன் திரைப்படத்தில் முதல் முதலாக மேற்கத்திய இசையை தமிழ் படத்தில் அறிமுகப்படுத்தினார் இளையராஜா.
ஈகோவால் பிரிந்த இளையராஜா
இந்த நிலையில் உன்னால் முடியும் தம்பி என்ற திரைப்படத்தில் பணியாற்றிய போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த படத்தில் இசை சம்பந்தமான வசனங்கள் வரும்போது சில வசனங்களை மாற்ற வேண்டும் என்றும், சில வசனங்களை புகுத்த வேண்டும் என்றும் இளையராஜா வற்புறுத்தியதாகவும் இதனால் பாலச்சந்தருக்கு அதிருப்தி ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இருப்பினும் இருவரும் மீண்டும் ‘புதுப்புது அர்த்தங்கள்’ என்ற திரைப்படத்தில் இணைந்தனர்.
கருத்து வேறுபாடு இருவருக்கும் உச்சத்தில் இருந்தாலும் இந்த படத்திலும் கே.பாலச்சந்தருக்கு சூப்பர் ஹிட் பாடல்களை இளையராஜா கம்போஸ் செய்து கொடுத்தார். அத்துடன் இருவரும் இணைந்து கடைசி வரை பணிபுரியவில்லை.
இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுக்கு காரணம் ஈகோ தான் என்று திரை உலகின் சிலர் கூறினாலும் உண்மையான காரணம் என்ன என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்.