கடவுளின் பெயரால் ஆணையிட்டு கூறுகிறேன்..எம்.பியாக தமிழில் பொறுப்பேற்றுக் கொண்டார் இளையராஜா..!

Ilayaraaja Government Of India
By Thahir Jul 25, 2022 09:05 AM GMT
Report

மாநிலங்களவை உறுப்பினராக தமிழில் பொறுப்பேற்றுக் கொண்டார் இசையமைப்பாளர் இளையராஜா.

எம்.பியாக பதவி ஏற்பு 

இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, தர்மசாலா கோவில் நிர்வாக அறங்காவலர் வீரேந்திர ஹெக்டே, பிரபல திரைக்கதை எழுத்தாளர் வி.விஜயேந்திர பிரசாத் ஆகியோர் மாநிலங்களவை நியமன எம்.பிகளாக அண்மையில் நியமனம் செய்யப்பட்டனர்.

கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற மலைக்கால கூட்டத்தொடரின் போது நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டோர் மாநிலங்களவையில் பதவியேற்றுக் கொண்டனர்.

Ilyaraaja

அப்போது இசையமைப்பாளர் இளையராஜா பதவியேற்கவில்லை.அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றதால்,இளையராஜாவால் கூட்டத்தில் பங்கேற்க முடியாவில்லை என கூறப்பட்டது.

இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக இன்று கடவுளின் பெயரால் ஆணையிட்டு கூறுகிறேன் என தமிழில் பதவியேற்றுக்கொண்டார்.