"பத்ம விருதுகளை நாம் திருப்பியளிக்கும் செய்தி தவறானது" - இளையராஜா விளக்கம்

video music ilayaraja
By Jon Jan 18, 2021 05:36 PM GMT
Report

இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் பிரசாத் ஸ்டுடியோ இடையேயான மோதல் நீதிமன்றம் வரை சென்று தீர்த்து வைக்கப்பட்டது. இளையராஜா பிரசாத் ஸ்டுடியோவில் ஒரு நாள் தியானம் மேற்கொள்ளவும் அவருடைய பொருட்களை எடுத்துச் செல்லவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. இந்நிலையில் மத்திய அரசின் பத்ம விருதுகளை இளையராஜா திருப்பியளிக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்த செய்திக்கு தற்போது இசையமைப்பாளர் இளையராஜா மறுப்பு தெரிவித்துள்ளார். பிரசாத் ஸ்டூடியோ விவகாரத்தில் அதிருப்தியில் இருப்பதால் இசையமைப்பாளர் இளையராஜா பத்ம விபூஷண் விருதை திருப்பி அளிக்கவுள்ளதாக தகவல்கள் பரவின. இதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் கொடுத்திருக்கிறார் இளையராஜா.

இதுகுறித்த வீடியோ பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், ‘பேரன்புக்குரியவர்களே! நான் சொல்லாத ஒரு கருத்தை, ஒரு தனிப்பட்ட நபருடைய கருத்தை நான் சொன்னதாக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இது முற்றிலும் தவறு என்பதை நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அப்படியொரு கருத்தை நான் வெளியிடவே இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்’’ என்று கூறியிருக்கிறார்.