இளையராஜாவை நேரில் சந்தித்த நடிகர் கமல் - எதற்கு தெரியுமா?
நடிகர் கமல்ஹாசன் இளையராஜாவைச் சந்தித்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பல வருடங்கள் பிரசாத் ஸ்டுடியோவில் இசைப் பயணத்தைத் தொடர்ந்து வந்த இசைஞானி தற்போது புதிய ஸ்டுடியோவிற்கு மாறியுள்ளார்.
அதையடுத்து அவரது புதிய ஸ்டுடியோவிற்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் வருகை புரிந்து வருகின்றனர். ஏற்கனவே ரஜினி ஒருமுறை விஜயம் புரிந்து இளையராஜா இசையமைப்பதை நேரடியாக பார்த்துவிட்டுச் சென்றார்.
தற்போது நடிகர் கமல்ஹாசன் மரியாதை நிமித்தமாக இளையராஜாவை அவரது ஸ்டுடியோவில் நேரில் சென்று சந்தித்துள்ளார். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு கூட்டணி என்றால் கமல் - இளையராஜா கூட்டணியைச் சொல்லலாம்.
காலத்தால் அழியாத காவியங்களை நமக்கு பரிசளித்த கூட்டணி இது. மூன்றாம் பிறை, நாயகன், மைக்கேல் மதன காம ராஜன், அபூர்வ சகோதரர்கள், விருமாண்டி உள்ளிட்ட பல படைப்புகளைக் கொடுத்துள்ளனர்.
மேலும் இளையராஜாவுக்கு மிகவும் நெருக்கமானவர் மற்றும் பிடித்தமானவர் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இளையராஜா மற்றும் கமல்ஹாசன் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.