அம்மாவுக்கு தான் அதிக சந்தோசம் : அமைச்சர் உதயநிதிக்கு இளையராஜா வாழ்த்து

Udhayanidhi Stalin Ilayaraaja
By Irumporai Dec 15, 2022 09:47 AM GMT
Report

நீங்கள் அமைச்சரானது உங்கள் அம்மாவுக்கு மிகவும் சந்தோசத்தை கொடுக்கும் என அமைச்சர் உதயநிதிக்கு இளையராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 அமைச்சராக உதயநிதி :

சேப்பாக்கம், திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் நேற்று தமிழக அமைச்சரவையில் இடம் பிடித்தார். அவர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பதவியேற்றார்.

அம்மாவுக்கு தான் அதிக சந்தோசம் : அமைச்சர் உதயநிதிக்கு இளையராஜா வாழ்த்து | Ilayaraja Congratulated Minister Udayanidhi

 இளையராஜா வாழ்த்து :

இதற்கு பலதரப்பட்ட அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர், அந்த வகையில் இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இசைஞானி இளையராஜா தனது வாழ்த்துக்களை தற்போது ஆடியோ வடிவில் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதில், ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் என்ற திருக்குறளை கூறி, நீங்கள் அமைச்சரானது உங்கள் அம்மாவுக்கு மிகவும் சந்தோசத்தை கொடுத்திருக்கும் என்பதை நான் எண்ணி பார்க்கிறேன்.

அமைச்சர் பதவி என்பதால் பொறுப்பு அதிகமாகியுள்ளது. அதனை நீங்கள் சிறப்பாக செயல்படுத்துவீர்கள் என கூறி தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.