நாளை எம்பியாக பதவியேற்கிறார் இளையராஜா
விளையாட்டு, சமூக சேவை ,கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மாநிலங்களவைக்கு 12 பேரை நியமன எம்.பி.க்களாக ஜனாதிபதி நியமிக்கலாம்.
இளையராஜா
அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டார். மேலும் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கிய முன்னாள் தடகள வீராங்கணை பி.டி.உஷா.
ஆந்திராவை சேர்ந்த திரைப்பட கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டோர் பதவியற்றுக்கொண்டனர் .
நாளை எம்பியாக பதவியேற்கிறார் இளையராஜா
இளையராஜா பதவி ஏற்கவில்லை அமெரிக்காவில் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றதால் பங்கேற்கவில்லை என தகவல் வெளியானது. இந்த நிலையில் இளையராஜா மாநிலங்களவை எம்.பி.ஆக நாளை பதவி ஏற்க உள்ளார்.
இந்த நிகழ்வுக்காக இளையராஜா இன்று டெல்லி புறப்பட்டு சென்றார் அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது .