இளையராஜாவின் அடுத்த அதிரடி ... பாட்டு பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ட்வீட் வைரல்
பிரதமர் மோடிக்கு ஆதரவாக இளையராஜா கருத்து தெரிவித்த பின் ட்விட்டரில் பதிவிட்ட பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி டெல்லியில் உள்ள புளூகிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேசன் நிறுவனம் 'மோடியும் அம்பேத்கரும்: சீர்திருத்தவாதியின் சிந்தனையும் செயல்வீரரின் நடவடிக்கையும்’ என்ற பெயரில் புத்தகம் ஒன்றை வெளியிட்டது. இந்தப் புத்தகத்திற்கு முன்னுரை எழுதிய இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் மோடி அம்பேத்கருக்கு இணையானவர் என்றும் பிரதமர் மோடி ஆட்சியின் பல திட்டங்கள், அம்பேத்கரின் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டவை என்றும் குறிப்பிட்டதால் சர்ச்சை எழுந்தது.
அவரின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், குறிப்பாக இளையராஜாவுக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்க போகிறார்கள். அதற்காகத்தான் அவர் இவ்வாறு மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசினார் என விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
— Ilaiyaraaja (@ilaiyaraaja) April 21, 2022
ஆனால் தனது கருத்தை திரும்ப பெற மாட்டேன் என்றும், தான் பதவிக்காக எதையும் பேசவில்லை என்றும் உண்மையைத்தான் சொன்னேன் என்றும் இளையராஜா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.அவருக்கு ஆதரவாக பாஜகவும் களத்தில் இறங்கிய நிலையில் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக இளையராஜாவுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில் இன்றைய தினம் அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவு மீண்டும் பேசு பொருளாக மாறியுள்ளது. அதில் ரஜினிகாந்த் நடித்த தளபதி படத்தில் இடம்பெற்ற சுந்தரி கண்ணால் ஒரு சேதி என்ற பாடலின், “நான் உன்னை நீங்க மாட்டேன், நீங்கிானல் தூங்க மாட்டேன். பாடுவேன் உனக்காகவே“ என்ற வரிகளை வீடியோவாக பதிவிட்டுள்ளார்.