என் பாட்ட use பண்ணிடீங்க - ரஜினியிடமும் முரண்டுபிடிக்கும் இளையராஜா!!
கூலி படத்திற்கு சிக்கல் தனது பாடலை யாரும் பயன்படுத்தக்கூடாது என இசைஞானி இளையராஜா தொடர்ந்து கூறி வருகின்றார்.
கூலி திரைப்படம்
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் கூலி. இப்படத்தின் டைட்டில் டீசர் அண்மையில் வெளியானது. ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

படத்தின் டைட்டில் டீசரில் 'வா வா பாக்கம் வா' பாடல் ரெமிக்ஸ் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தது. இதன் காரணமாக, தன்னுடைய இசையை அனுமதியின்றி பயன்படுத்தியதாக, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இளையராஜா நோட்டீஸ்
'வா வா பாக்கம் வா' பாடலின் இசைக்கு உரிய அனுமதி பெற வேண்டும், அல்லது டீசரில் இருந்து அந்த இசையை நீக்க வேண்டும் என சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவ்வாறு இல்லாத பட்சத்தில், சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள தங்களுக்கு அனைத்து உரிமைகளும் இருப்பதாக இளையராஜா தரப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த நாய்கள் IBC Tamil
நாமலுக்காக முந்திக்கொண்டு வந்த அர்ச்சுனா! பைத்தியம் என பதில் வழங்கிய மகிந்த ஜெயசிங்கவால் சபையில் வாக்குவாதம் IBC Tamil
உயர்கல்வி வாய்ப்புகளை தவறவிட்ட மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்! அரசாங்கத்தின் புதிய திட்டம் IBC Tamil