21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இளையராஜாவுடன் இணைந்த கங்கை அமரன் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்
நீண்ட வருடங்களுக்கு பிறகு கங்கை அமரன் இளையராஜாவை சந்தித்துள்ள சம்பவம் சினிமா ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் கூட்டணிகளில் இளையராஜா - கங்கை அமரனும் இணையரும் ஒருவர். இந்த கூட்டணி கோழி கூவுது, கொக்கரக்கோ, பொழுது விடிஞ்சாச்சு, தேவி ஸ்ரீதேவி, வெள்ளை புறா ஒன்று, எங்க ஊரு பாட்டுக்காரன், செண்பகமே செண்பகமே, கரகாட்டக்காரன், அண்ணனுக்கு ஜெய், ஊரு விட்டு ஊரு வந்து பல படங்களில் தொடர்ந்தது.
சகோதரர்களான இருவருக்கும் 2000 ஆம் ஆண்டு ஆர் வி உதயகுமார் இயக்கத்தில் ஜெயராம் மற்றும் உதயபானு நடிப்பில் வெளியான 'சின்ன ராமசாமி பெரிய ராமசாமி' படத்தை தயாரிக்கும் போது கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பின் கடந்த 13 வருடங்களாக இருவரும் பேசிக் கொள்ளவில்லை.
இந்நிலையில் இளையராஜாவும், கங்கை அமரனும் சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. கங்கை அமரனின் மகனும் திரைப்பட இயக்குநருமான வெங்கட் பிரபு உள்ளிட்ட பலரும் அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்த நிலையில் இந்த சந்திப்பு குறித்து கங்கை அமரன் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அண்ணன் அழைப்பதாக போனில் சொன்னதை கேட்டதும் இவ்வளவு காலம் அதற்குத்தான் காத்திருந்தேன் என்பதுபோல உடனே போய் அவரை சந்தித்தேன். எந்தச் சண்டை சச்சரவுகளும் இல்லாமல் அருமையாகப் பேசிக்கொண்டு இருந்தார். இனிமேல் சந்தோஷமாக இணைந்திருப்போம் என கூறினார்.