இளவரசி, சுதாகரனின் மேலும் சில சொத்துக்கள் அரசுடைமை
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள இளவரசி மற்றும் சுதாகரனின் சில சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான 6 சொத்துகள் அரசுடைமையாக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.
அதாவது சென்னை டிடிகே சாலை ஸ்ரீராம் நகரில் உள்ள லெக்ஸ் பிராப்பர்டி, டெவலப்மெண்ட் நிறுவனத்தின் பெயரில் உள்ள சொத்துகள் அதேபோல் சென்னை வாலஸ் தோட்டத்திலுள்ள 5 சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டன.
இந்நிலையில், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டிலும் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது, வாலாஜாபாத் அடுத்துள்ள ஊத்துக்காடு பகுதியில் அவர்களுக்கு சொந்தமான 300 ஏக்கர் நிலம் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.