வாக்காளர் பட்டியலில் சசிகலாவை தொடர்ந்து இளவரசி பெயரும் நீக்கம்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர் பட்டியலிலிருந்து சசிகலா பெயர் நீக்கப்பட்டுள்ளது. இது அமமுக மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சசிகலாவின் சகோதரர் மனைவி இளவரசியின் பெயரும் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமமுக வேட்பாளர் வைத்தியநாதன் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
போயஸ் கார்டன் வேதா இல்ல முகவரியில் தான் ஜெயலலிதா, சசிகலா ஆகியோருக்கு ஓட்டுக்கள் இருந்தன. ஆனால், போயஸ் கார்டன் மற்றும் தற்போது சசிகலா வசிக்கும் அபியுல்லா சாலை இல்லம் ஆயிரம் விளக்கு தொகுதிக்குள் வருவது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டு விலாசத்தில் தான் சசிகலா, இளவரசி ஆகியோர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருந்தனர். ஆனால், 2016 சட்டசபை தேர்தலின்போது ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வாக்குச்சாவடிக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் இவர்கள் 2 பேருமே சென்று வாக்களிப்பார்கள்.
ஆனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு நினைவிடமாக மாறியுள்ளது. பொதுமக்களும் அங்கு செல்ல அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை. சசிகலாவுக்காக இதே போயஸ் கார்டனில் வேறு ஒரு புது வீடு தயாராகி வருகிறது. ஆனால், அவர் அங்கு செல்லாமல், இப்போது வரை தி.நகர் வீட்டில்தான் இருக்கிறார்.
இந்த வீடு அவரது அண்ணன் மகள் வீடு. அதனால் இங்கும் ஓட்டு இவருக்கு இருக்காது என்று சொல்லப்படுகிறது.