உலக புகழ் பெற்ற ஓவியர் இளையராஜா மறைவுக்கு முதல்வர் இரங்கல்!
ஓவியர் இளையராஜா மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தத்ரூப ஓவியங்களின் அரசன் என்று அழைக்கப்படுபவர் ஓவியர் இளையராஜா.
கும்பகோணம் அருகே செம்பியவரம்பல் என்ற ஊரில் பிறந்த இவரின் ஓவியங்கள் அனைத்தும் உலக புகழ் பெற்றதாகும் இவருக்கு பல விருதுகளும், அங்கீகாரங்களும் கிடைத்துள்ளது.
ஓவியர் இளையராஜாவின் திராவிட பெண்கள் என்ற ஓவியங்கள் பெரும் புகழ்பெற்று அங்கீகாரம் கிடைக்க செய்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு திரும்பிய இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவருக்கு முழுவதுமாக நுரையீரல் தொற்று ஏற்பட்டது.
இந்த சூழலில் நேற்று இரவு 12 மணியளவில் மாரடைப்பு காரணமாக இளையராஜா பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், தம் தனித்துவமிக்க, இயல்பான ஓவியங்களினால் நம் கவனம் ஈர்த்த நுட்பமான ஓவியர் திரு. இளையராஜா அவர்களின் மறைவுச் செய்தியறிந்து வேதனையடைந்தேன் என்றும், அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும், கலைகளின் வழியாக கலைஞர்கள் காலம் கடந்தும் நம்மோடு வாழ்வர்; ஓவியர் இளையராஜாவும் வாழ்வார் என்று பதிவிட்டுள்ளார்.
தம் தனித்துவமிக்க, இயல்பான ஓவியங்களினால் நம் கவனம் ஈர்த்த நுட்பமான ஓவியர் திரு. இளையராஜா அவர்களின் மறைவுச் செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
— M.K.Stalin (@mkstalin) June 7, 2021
அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்!
கலைகளின் வழியாக கலைஞர்கள் காலம் கடந்தும் நம்மோடு வாழ்வர்; ஓவியர் இளையராஜாவும் வாழ்வார்! pic.twitter.com/1ssRWmzDjS