ஆசையாக பாட்டு பாடிய இளையராஜா...குறுக்கிட்டு கத்திய நபர் - நிகழ்ச்சியில் பரபரப்பு
மேடையில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென இசையமைப்பாளர் இளையராஜா திடீரென கோபமடைந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இளையராஜா
சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நுாலக அரங்கத்தில் 34வது அகில இந்திய மத்திய வருவாய் கலாச்சார கலை கூடல் நிகழ்ச்சி 3 நாட்கள் நடைபெற உள்ளது.
இதன் முதல் நாள் தொடக்க விழாவில், இசையமைப்பாளரும், நாடாளுமன்ற நியமன உறுப்பினருமான இளையராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் இளையராஜா ஜனனி ஜனனி ஜகம் நீ என்னும் தன்னுடைய பாடல் வரிகள் மூலம் பாடி நிகழ்ச்சியை இளையராஜா தொடங்கி வைத்தார்.
அவதுாறுகளை கண்டு கொள்வதில்லை
பின்னர் தொடர்ந்து பேசிய அவர், ஒரு சிற்பிக்கு எவ்வாறு தேவையில்லாத பாகங்களை நீக்கினால் மட்டுமே அதன் சிலை உருவாகுமோ.. அதுபோல தேவையில்லாத தட்டுகளை நீக்கினால் மட்டுமே முறையான தாளம் உருவாகும் என்றார்.
அதுபோல தன்னைப் பற்றி வரும் அவதுாறு பேச்சுக்களை நான் ஒரு போதும் கண்டு கொள்வதில்லை எனக் கூறினார்.
மேலும் உங்கள் அனைவரும் என்னுடைய ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு அழைத்து சென்று காட்ட வேண்டும் என்பது எனது ஆசை என்று கூறிய அவர் தனது ஸ்டுடியோவில் நடைபெற்று வரும் ரெக்கார்டிங்கை போன் கால் மூலமாக கேட்க வைத்தார். இப்போது உங்கள் அனைவரும் எனது ஸ்டுடியோவிற்கு சென்ற மகிழ்ச்சி எனக்கு உள்ளது என அவர் கூறினார்.
கடுப்பான இளையராஜா
முன்னதாக நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஜனனி ஜனனி பாடலை பாடும் போது, மேடைக்கு அருகே இருந்த ஒருவர், பாடுவதை குறுக்கிடுவது போல கத்தினார்.
இதனால் கடுப்பான இளையராஜா அதனை வெளிக்காட்டி கொள்ளடாமல் தொடர்ந்து பாடலை பாடினார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.