இயக்குநர் கே.விஸ்வநாத் மறைவு; தெலுங்கில் இரங்கல் தெரிவித்த இளையராஜா - வைரலாகும் வீடியோ...!
இயக்குநர் கே.விஸ்வநாத் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து இசையமைப்பாளர் இளையராஜா வீடியோ வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் கே.விஸ்வநாத் மறைவு
பிரபல இயக்குநர் கே.விஸ்வநாத் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது (92). இயக்குநர் கே.விஸ்வநாத் வயது மூப்பு காரணமாக கடந்த சில வருடங்களாக சினிமாவிலிருந்து விலகி ஐதராபாத்தில் தனது குடும்பத்துடன் ஓய்வெடுத்து வந்தார்.
கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனில்லாமல் நேற்று இரவு அவர் காலமானார். இவரது உடல் ஐதராபாத்தில் உள்ள ஃபிலிம் நகரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் கே.விஸ்வநாத் மறைவுக்கு பிரதமர் மோடி, கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட திரையுலகினர், பிரபலங்கள் அஞ்சலி மற்றும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இளையராஜா இரங்கல்
இந்நிலையில், இயக்குநர் கே.விஸ்வநாத் மறைவிற்கு இசையமைப்பாளர் இளையராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், அவர் தெலுங்கில் பேசி மறைந்த இயக்குநர் கே.விஸ்வநாத்திற்கு இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
— Ilaiyaraaja (@ilaiyaraaja) February 3, 2023