எம்.பி.யான பின் முதன்முறையாக தேசியக்கொடி ஏற்றிய இளையராஜா - வைரலாகும் புகைப்படம்
எம்.பி.யாக முதன்முறையாக இந்திய தேசியக்கொடி ஏற்றி இளையராஜா மரியாதை செலுத்தினார்.
75-வது சுதந்திர தினம்
இன்று நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள இந்தியர்கள் தங்களுடைய வீடுகளில் மூவர்ணக்கொடியை ஏற்றி 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடி வருகின்றனர். மேலும், உலக மக்கள் சமூகவலைத்தளங்களில் சுதந்திர தின விழா வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பிரதமர் மோடி
இன்று நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இன்று சென்னையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை கோட்டை கொத்தளத்தில் ஏற்றுக் கொண்டார்.
முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் 2வது முறையாக இந்திய தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
இளையராஜா
இந்நிலையில், 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் உள்ள பிரசித்திப் பெற்ற ரமணா ஆசிரமத்தில் இசைஞானி இளையராஜா தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர். எம்.பி.யாக முதல்முறையாக அவர் இந்திய மூவர்ண தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தியுள்ளார்.
75 வது சுதந்திர தின விழாவை திருவண்ணாமலையில் உள்ள ரமணா ஆசிரமத்தில் இசைஞானி இளையராஜா தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்.. #IndependenceDay #IndiaAt75 pic.twitter.com/NRlO6GlWOS
— Filmi Street (@filmistreet) August 15, 2022