இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் - அண்ணாமலை கோரிக்கை

Annamalai ilaiyaraaja bharat-ratna-award
By Nandhini Apr 18, 2022 10:35 AM GMT
Report

சமீபத்தில் புளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேசன் நிறுவனம் "மோடியும் அம்பேத்கரும்" என்ற பெயரிலான புத்தகத்தை வெளியிட்டது. இந்த புத்தகத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார்.

அதில், மோடியின் ஆட்சியின் செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார் என்றும், மோடிக்கும், அம்பேத்கருக்கும் நிறைய விஷயங்களில் ஒற்றுமை இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இளையராஜாவின் இந்தக் கருத்தை பலரும் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், இளையராஜாவின் மகன் யுவன்சங்கர் ராஜா தனது இன்ஸ்டா பக்கத்தில், கருப்பு உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, கறுப்பு திராவிடன், பெருமைமிக்க தமிழன் என்று பதிவிட்டிருந்தார். 

இதனையடுத்து, இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், நானும் கருப்பு திராடன்தான், எனக்கு சத்தியமாக இந்தி தெரியாது. இளையராஜாவுக்கு பாரத ரத்னா வழங்கி கவுரவிக்க வேண்டும். தேவைப்பட்டால் பாஜக தலைமைக்கு கடிதம் எழுத தமிழக பாஜக தயாராக உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் - அண்ணாமலை கோரிக்கை | Ilaiyaraaja Annamalai Bharat Ratna Award