உன்னை நேசிக்கிறேன் இளையராஜா மாமா - வாழ்த்து கூறிய ஐஸ்வர்யா
நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார் .
தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார். ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்துவிட்டார்.
இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.
தனுஷை பிரிந்த பிறகு தன்னுடைய பிட்னஸ் குறித்த விஷயங்களில் அதீத ஆர்வம் காட்டி வருகிறார் ஐஸ்வர்யா. ஜிம்மில் வொர்க்கவுட், யோக பயிற்சி, படப்பிடிப்பு தளம் என்று பல புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் ஐஸ்வர்யா பகிர்ந்து வருகிறார்.
இன்று இசைஞானி இளையராஜா தனது 80வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இவருடைய பிறந்த நாளுக்கு ரசிகர்கள், சினிமாத்துறையினர் உள்ளிட்ட பலர் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இளையராஜாவின் பிறந்தநாளுக்கு ஐஸ்வர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார்.
இது குறித்து அவர், இந்த வியாழன் இதைவிட பொருத்தமான த்ரோபேக் ஆக முடியாது! உங்களை பார்த்து, உங்களின் பேச்சைக் கேட்டு, உங்களின் ஸ்டுடியோவில் நேரத்தை செலவிடுகிறேன்.. உங்கள் முன்னிலையில் இருந்ததற்காக நான் உண்மையிலேயே பாக்கியவான்! உன்னை நேசிக்கிறேன் @இளையராஜா மாமா என்று பதிவிட்டுள்ளார்.
Can’t be a more apt throwback to this Thursday!Growing up seeing you,listening to you,spending time in your studio n home..I’m truly blessed just to have gotten to be in your presence!Love you @ilaiyaraaja uncle ..the thrown is thy’s always …#happybirthday pic.twitter.com/snq9zFLj2B
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) June 2, 2022