டங்க்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு போராட்டம் - ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து நேரில் சென்று ஆதரவு
டங்க்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான விவசாயிகளின் வாகன பேரணியில் ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளார்.
டங்ஸ்டன் சுரங்க போராட்டம்
மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரிட்டாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 2000 ஏக்கர் பரப்பளவிலான பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது.
இந்த திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி முல்லைப் பெரியாறு ஒரு போக பாசன விவசாயிகள் சங்கம் சார்பாக மதுரை தலைமை தபால் நிலையத்தை நோக்கி பேரணி நடைபெற்று வருகிறது.
ஐஜேகே ஆதரவு
இந்த வாகன பேரணியில் ஐஜேகே தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து கலந்து கொண்டு அப்பகுதி மக்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய மாநில அரசுகள் உடனடியாக இந்த திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும், முல்லைப் பெரியார் ஒருபோக பாசனப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்களை எழுப்பினர்.
இந்நிகழ்வில் ஐஜேகே கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.