ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு - கைதான கிங்சோ ஜாமீனில் விடுவிப்பு
கடந்த 2017ம் ஆண்டு சென்னை ஐஐடியில் மேற்குவங்கத்தை சார்ந்த தலித் மாணவியை, தன்னுடன் பயின்ற ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இதனையடுத்து, பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவி மன உளைச்சலுக்கு ஆளாகி, ஐஐடி புகார் கமிட்டியிடம் கடந்த 2020ம் ஆண்டு தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து தெரிவித்து இருக்கிறார்.
இந்த புகாரின் அடைப்படையில் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், மாணவியின் புகார் மீது நடவடிக்கை எடுக்காமால், 10 மாதங்களுக்கு மேலாக வழக்கை கிடப்பில் போடப்பட்டதாக, சம்பந்தப்பட்ட மாணவர்கள், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள், மயிலாப்பூர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க மாதர் சங்கம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதனையடுத்து, இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.
இவ்வழக்கில் 8 பேரை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்தனர். இந்த குற்றத்தில் தொடர்புடைய முன்னாள் மாணவரான கிங்கோ என்பவர் கொல்கத்தாவில் நேற்று முன்தினம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஐஐடி பாலியல் வழக்கு கைதான கிங்சோ தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளர். ஏற்கெனவே நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் பெற்றிருந்ததால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.