Friday, Apr 4, 2025

இந்தியாவின் கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம்

College Ranking Chennai IIT
By Thahir 4 years ago
Report

நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடத்தை பிடித்தது. அதேபோல், சிறந்த கல்லூரிகள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 3 கல்லூரிகள் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளன.

மத்திய கல்வி அமைச்சகம் ஆண்டுதோறும் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான 'டாப் 10' பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2021ம் ஆண்டுக்கான பட்டியலை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று வெளியிட்டார்.

இந்தியாவின் கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் | Iit Chennai Ranking College

அதில், ஒட்டுமொத்தமாக சிறந்த கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது. இரண்டாம் இடத்தில் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனமும், மூன்றாம் இடத்தில் மும்பை ஐஐடியும் உள்ளன. சிறந்த பல்கலைகள் பட்டியலில் பெங்களூரு ஐஐடி முதலிடத்திலும், டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலை 2ம் இடத்திலும், வாரணாசியில் உள்ள பணாரஸ் ஹிந்து பல்கலை 3வது இடத்திலும் உள்ளது.

கோவையை சேர்ந்த அமிர்தா விஸ்வ வித்ய பீடம் பல்கலை 5வது இடத்தை பிடித்து உள்ளது.பொறியியல் கல்லூரிகளில் சென்னை ஐஐடி முதலிடத்தை பிடித்தது. டில்லி ஐஐடி 2ம் இடமும், மும்பை ஐஐடி 3ம் இடமும் பிடித்தது.மேலாண்மை பிரிவில் முதலிடத்தை ஆமதாபாத் ஐஐஎம் பிடித்தது.

அடுத்த இரு இடங்களில் பெங்களூரு ஐஐஎம், கோல்கட்டா ஐஐஎம் உள்ளன. சிறந்த கல்லூரிகள் பட்டியலில் டில்லியில் உள்ள மிரண்டா ஹவுஸ் கல்லூரி முதலிடத்தையும், டில்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் பெண்கள் கல்லூரி 2ம் இடமும், சென்னை லயோலா கல்லூரி 3ம் இடமும் பிடித்துள்ளது.

இதில், தமிழகத்தை சேர்ந்த மேலும் இரு கல்லூரிகளும் முதல் 10 இடங்களுக்கு இடம்பெற்றுள்ளன. கோவையில் உள்ள பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி 6ம் இடமும், சென்னை மாநிலக் கல்லூரி 7ம் இடமும் பிடித்தன.