இயற்கை அதிசயங்களில் ஒன்றான இகுவாசு அருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

Viral Video Brazil
By Nandhini Oct 17, 2022 05:41 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

உலகின் புதிய இயற்கை அதிசயங்களில் ஒன்றான பிரேசிலின் இகுவாசு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரிக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இகுவாசு அருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்

அர்ஜென்டினா-பிரேசில் எல்லையில் அமைந்துள்ள இகுவாசு அருவி (Iguazu Falls), கனமழைக்குப் பிறகு வழக்கத்தை விட 10 மடங்கு தண்ணீர் அதிகமாக பாய்கிறது.

உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி அமைப்பானது ஒரு வினாடிக்கு 396,258 கேலன் நீரின் சாதாரண ஓட்ட விகிதத்தைக் கொண்டுள்ளது. ஆனால் கடந்த வாரம், விநாடிக்கு 1.6 கோடி கனஅடி வீதம் தண்ணீர் கொட்டுகிறது.

தற்போது, பிரமாண்ட அருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளத்தில் அச்சமின்றி சுற்றுலாப் பயணிகள் நெருங்கிச் சென்று, ரசித்து, புகைப்படம் எடுத்து வருகின்றனர்.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  

iguazu-falls-brazil