ஆணுக்கு 17 நிமிடங்கள்; பெண்ணுக்கு 22 நிமிடங்கள் - சிகரெட் ஆய்வில் பகீர் தகவல்!

London Smoking
By Sumathi Jan 01, 2025 11:30 AM GMT
Report

சிகரெட்டை அடிப்பதன் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்த ஆய்வு முடிவு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புகைப்பிடித்தல்

லண்டன் பல்கலைக்கழகம் புகைப்பிடித்தல் தொடர்பான ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதன் முடிவில் வெளியாகியுள்ள தகவலின்படி,

smoking

ஒவ்வொரு சிகரெட்டை புகைக்கும்போது சராசரியாக ஒரு ஆண் தன் வாழ்நாளில் 17 நிமிடங்களையும் ஒரு பெண் 22 நிமிடங்களையும் இழக்கின்றனர்.

காலையில் டீ, காஃபி குடிப்பவரா நீங்கள்? இந்த புற்றுநோயே வராதாம்..

காலையில் டீ, காஃபி குடிப்பவரா நீங்கள்? இந்த புற்றுநோயே வராதாம்..

ஆய்வு தகவல்

புகைப்பிடிக்காதவர்களின் வாழ்நாளோடு புகைப்பிடிப்பவர்களின் வாழ்நாள்களை ஒப்பிடுகையில், சுமார் 10 -11 ஆண்டுகள் ஆயுட்காலம் குறைவு.

ஆணுக்கு 17 நிமிடங்கள்; பெண்ணுக்கு 22 நிமிடங்கள் - சிகரெட் ஆய்வில் பகீர் தகவல்! | Igarette Smoking Women More Vulnerable

தினமும் 10 சிகரெட்டுகளை புகைப்பவர்கள், ஒரு வாரம் மட்டும் விட்டுவிடுவதன் மூலம் ஒரு நாளை இழப்பதைத் தடுக்கலாம். எட்டு மாதங்களுக்குத் தவிர்ப்பதன் மூலம் ஒரு மாத ஆயுளைப் பெறலாம்.

புகைப்பிடிப்பவர்களிடையே எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் மூன்றில் இரண்டு பேர் புகைப்பிடித்தல் தொடர்பான நோயினால் இறந்துள்ளனர். இங்கிலாந்தில் மட்டும் புகைப்பிடித்தல் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 80,000 பேர் இறக்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.