லஞ்ச ஒழிப்புத்துறை பொறுப்பு இயக்குநராக துரை குமார் நியமனம்!

Tamil nadu Election
By Vinoja Apr 12, 2026 08:14 AM GMT
Report

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநர் பதவி காலியாக இருந்த சூழலில், தற்போது அந்தப் பொறுப்பை கவனிப்பதற்கான புதிய அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சில தினங்களாக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பணியிடம் காலியாகவே இருந்து வந்தத நிலையில், அந்த பொறுப்பை ஐ.ஜி துரை குமார் கூடுதலாகக் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை பொறுப்பு இயக்குநராக துரை குமார் நியமனம்! | Ig Durai Kumar Appointed As Director Of Dvac

சட்டமன்ற தேர்தல் வருகிற 23 ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் தீவிரமாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சில அரசு அதிகாரிகள், ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாக அ.தி.மு.க., பா.ஜனதா, த.வெ.க. போன்ற கட்சிகள் குற்றம்சாட்டி வருந்தன. அதனை தொடர்ந்து, தமிழகத்தின் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உயர் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு வருகின்றது.

தமிழகத்தின் தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. சென்னை போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட பல அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர்.

இந்நிலையில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநர் பதவி காலியாக இருந்த சூழலில், தற்போது அந்தப் பொறுப்பை கவனிப்பதற்கான புதிய அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை பொறுப்பு இயக்குநராக துரை குமார் நியமனம்! | Ig Durai Kumar Appointed As Director Of Dvac

முன்னதாக, லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி-யாக இருந்த டேவிட்சன் தேவாசிர்வாதம் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கு சந்தீப் மிட்டலின் நியமனம் ரத்து செய்யப்பட்டது.

இதனால் கடந்த சில நாட்களாக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பணியிடம் காலியாக இருந்த நிலையில், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க. மணிவாசன் நேற்று (ஏப்ரல் 11, 2026) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் பிரகாரம் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி-யாக (SIC-I) பணியாற்றி வரும் ஏ.டி. துரை குமார் ஐபிஎஸ் லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநர் பொறுப்பை கூடுதலாகக் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மறு உத்தரவு வரும் வரை அல்லது ஒரு நிரந்தர அதிகாரி நியமிக்கப்படும் வரை, ஐ.ஜி. துரை குமார் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பொறுப்பை முழுமையாகக் கவனிப்பார். ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.