போர் பதற்ற சூழலில் ரூ.8542 கோடி நிதி பெரும் பாகிஸ்தான் - இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி கடன் வழங்கும் IMF
பாகிஸ்தானுக்கு ஒரு பில்லியன் டாலர் நிதி வழங்க IMF ஒப்புதல் அளித்துள்ளது.
போர் பதற்றம்
பஹல்காம் தாக்குதலுக்கு, பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கியழித்தது.
இதனை தொடர்ந்து, ஆபரேஷன் பன்யான் மர்சூஸ் (Operation Bunyun Al Marsoos) என்ற பெயரில், இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
பாகிஸ்தானின் தாக்குதல்களை, இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்து, பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கிடையே போர் நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆபரேஷன் பன்யான் மர்சூஸ் என இந்தியா மீதான தாக்குதலுக்கு பெயரிட்டுள்ள பாகிஸ்தான் - அதன் அர்த்தம் என்ன?
இந்த சூழலில், பாகிஸ்தானிற்கு ஒரு பில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் கடன் வழங்க IMF முன் வந்துள்ளது.
1 பில்லியன் டாலர் நிதி
பாகிஸ்தானுக்கு கடன் உதவி வழங்குவதற்கான, IMF எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
IMF உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் நிதிகளை பாகிஸ்தான் உரிய நோக்கத்திற்கு பயன்படுத்தாமல், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்க பயன்படுத்துவதாக இந்தியா குற்றஞ்சாட்டியது.
இதனையடுத்து நிதி வழங்குவது தொடர்பாக IMF உறுப்பு நாடுகள் கலந்து கொண்ட வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கு ஒரு பில்லியன் டாலர் கடன் வழங்க IMF ஒப்புதல் அளித்துள்ளது.
IMF-இன் முடிவுக்கு, பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்துள்ளார்.
I’m not sure how the “International Community” thinks the current tension in the subcontinent will be de-escalated when the IMF essentially reimburses Pakistan for all the ordnance it is using to devastate Poonch, Rajouri, Uri, Tangdhar & so many other places.
— Omar Abdullah (@OmarAbdullah) May 10, 2025
"இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், சர்வதேச நாணய நிதியம் மூலமாக பாகிஸ்தானுக்கு தொடர்ந்து நிதி வழங்கினால் அந்த நாடு எப்படி தாக்குதலை நிறுத்தும்" என காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
கூடுதலாக 1.4 பில்லியன் டாலர்களை, பருவநிலை மாற்ற பாதிப்புகளை தடுப்பதற்கான திட்டத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு வழங்க பரிசீலித்து வருவதாக IMF தெரிவித்துள்ளது.