ஆதார், பான் கார்டு நகல் கொடுத்தால் பெட்ரோல், டீசல் இலவசம்
diesel
Petrol
By Petchi Avudaiappan
உத்திரமேரூரில் ஆதார், பான் கார்டு நகல் கொடுத்தால் இலவசமாக ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் வழங்கப்படும் என பெட்ரோல் பங்க் நிறுவனம் அறிவித்ததால் பொதுமக்கள் குவிந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் இயங்கிவரும் இந்தியன் பெட்ரோல் பங்கில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு ஆகியவற்றின் நகலை கொடுத்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது.
இதனைக் கேள்விப்பட்ட சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் தங்களுடைய ஆதார் மற்றும் பான் கார்டு ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு பெட்ரோல் பங்க் நோக்கி வந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.