மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை - மின்சார வாரியம்

V. Senthil Balaji Government of Tamil Nadu
By Thahir Nov 29, 2022 05:34 AM GMT
Report

ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் நடைபெற்று வரும் நிலையில், மின்சார வாரியம் முக்கிய அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் 

ஆதார் எண்ணை மின் இணைப்புடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என மின்சாரத்துறை அறிவித்திருந்த நிலையில், மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தமிழகம் முழுவதும் நேற்று முதல் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இந்த சிறப்பு முகாம் டிசம்பர் 31-ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தும் மின் அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பலர் தங்களது ஆதார் எண்ணை, மின் இணைப்பு எண்ணுடன் இணைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், மின் இணைப்புடன் ஆதார் என்னை இணைக்க பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை 

அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவியின்படி பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி அதிகாரிகளுக்கு மின்வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

If you buy money to link Aadhaar number with electricity connection, strict action will be taken

அதில், பொதுமக்களிடம் பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்களுக்கு வரும் முதியவர்கள், மாற்றுத்திறனிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இணைப்பு பணியில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டால் மாற்று கணினியை தயாராக வைத்திருக்க வேண்டும். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதன் முக்கியத்துவத்தை பிளக்ஸ் போர்டு மூலம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நேற்று இரவு 8 மணி நிலவரப்படி, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்த நுகர்வோர்களின் எண்ணிக்கை 19,35,867, ஆன்லைன் மூலமாக இணைத்த நுகர்வோர்கள் 15, 98, 413, மின்வாரிய அலுவலகத்தில் நேரில் சென்று இணைத்தவர்கள் 3, 37, 454 பேர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.