விஜய் மன்னிப்பு கேட்டால்... பொன்ராஜின் பதிவு
அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்ககோரி தவெக தலைவர் விஜய் டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
அரசியல் விமர்சகரும், அப்துல் கலாமின் முன்னாள் உதவியாளருமான பொன்ராஜ் தவெக பெண்கள் குறித்து தரக்குறைவான வார்த்தைகளில் விமர்சித்திருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த விஜய், டிஜிபியிடம் அளித்த மனுவில், ஆளும் தி.மு.க.வின் அதீத ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் பொன்ராஜ் என்கிற நபர் தமிழகம் முழுவதும் இருக்கும் என் அம்மா, அக்கா, தங்கைகளான ஒட்டுமொத்த தமிழ்நாட்டுப் பெண்கள் இனத்தையே விலைமாதர் என்று அர்த்தம் தொனிக்கும் சொல்லை நேரடியாகவே பயன்படுத்தி மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து வருகிறார்.

நம் தமிழக மகளிரை மிக மோசமாகப் பேசி வரும் இந்த நபர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுத்து பெண்களின் கண்ணியத்தையும் மரியாதையையும் காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பொன்ராஜ் எக்ஸ் தள பக்கத்தில், விஜய்க்காக காயம்பட்டு, உயிர்நீத்த இளைஞர்களின் குடும்ப பெண்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அதே பதிவில், "அரசியலில் நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வக்கு இல்லை என்றால் இப்படியா வசை பாடுவது. நான் பெண்களை எப்போதும் கண் போல போற்றுபவன், உங்களை போல் வீட்டில், சினிமாவில், உங்கள் கட்சியில் பெண்களை அவமரியாதையாக நடத்திவிட்டு, அரசியலில் பெண்ணை போற்றுபவன் போல் நடிப்பவன் அல்ல. எந்த பெண்ணையும் அது உங்கள் ரசிகையாக இருந்தாலும் இழிவு படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை" என கூறியிருக்கிறார்.

30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan