பிரபாகரன் உயிரோடு இருந்தால் வர சொல்லுங்கள் - சவுக்கு சங்கர் பரபரப்பு பேச்சு
பிரபாகரன் உயிரோடு இருந்தால் வர சொல்லுங்கள் நான் பேட்டி எடுக்கிறேன் என்று அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.
உயிரோடு இருந்தால் வர சொல்லுங்கள்
ஐபிசி தமிழுக்கு பேட்டி அளித்த அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரிடம் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ.நெடுமாறன் பேசியது பற்றி நெறியாளர் சங்கர சர்மா கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த அவர், ஐயா நெடுமாறன் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக சொல்கிறார் இருந்தால் வர சொல்லுங்கள். நானே பேட்டி எடுக்கிறேன்.பழ நெடுமாறனுக்கு வயசு ஆயிடுச்சு அவரு எதாவது பேசிட்டு இருப்பாரு.

பிரபாகரனுக்கு காபி வாங்கி தருகிறேன்
பிரபாகரன் உயிரோடு இருந்தால் வர சொல்லுங்கள் போராட்டத்தை முன்னெழுச்சி எடுத்து நடத்துங்கள் என்று வாழ்த்து தெரிவிக்கிறேன். அவரை நானே ஐபிசி தமிழ் நேயர்களுக்காக ஒரு நேர்காணல் எடுக்கிறேன்.
இதை போய் விவாதித்து கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். பழ.நெடுமாறன் நம்பை பற்றி செய்தி வரவில்லை. நம்மை பற்றி பேச வேண்டும் என்பதற்காக இதை தெரிவித்து இருப்பதாக கூறினார்.
மேலும் பிரபாகரன் செய்தியாளர்களை சந்திக்கட்டும் அப்புறம் சர்வதேச அரசியல் பற்றி பேசலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.