கடலுக்குள் பேனா சிலை வைத்தால் உடைப்பேன் - சீமான் ஆவேசம்
கடலுக்குள் பனா நினைவுச் சின்னம் வைப்பது தொடர்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.
கருத்துக் கேட்பு கூட்டம்
இக்கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்று தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.
இந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று தனது கருத்தை பதிவு செய்தார்.
அப்போது பேசிய அவர், நினைவு சின்னம் வைக்க வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் கடலுக்குள் வைக்க கூடாது என்று தான் நாங்க சொல்கிறோம்.
சிலை வைத்தால் உடைப்பேன் - சீமான்
கடலுக்குள் வைத்தால் அது சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு வரும். 8551.13 சதுர மீட்டரை நினைவு சின்னம் அமைக்க எடுக்கப்படுவதாக பேசினார். மேலும், அங்கே கல் மற்றும் மண்ணை கொட்டினால் அழுத்தம் ஏற்படும் இதனால் பவளப்பாறைகள் பாதிக்கப்படும்.
அவர் பேசிக் கொண்டிருக்கும் போது திமுகவைச் சார்ந்த சிலர் எதிராக குரல் எழுப்பிய போது ஆவேசமடைந்த சீமான் நீ கடலுக்குள்ள பேனாவை அமைத்திடு நான் ஒரு நாள் உடைப்பேன் என்றார்.
பள்ளிக்கூடத்தை சீரமைக்க காசு இல்லை, பேனா சிலை வைக்க காசு எங்க இருந்து வருகிறது என கேள்வி எழுப்பினார்.
சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் அதனால் கடலுக்குள் பேனா வைப்பதை எதிர்கிறோம். அதை தடுத்து நிறுத்த கடுமையான போராட்டங்களை செய்வேன் இது உறுதி என்று பேசினார்.
இதனால் கருத்து கேட்பு கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.